Thursday, April 21, 2011

Maruthankerny



மருதங்கேணி

        இலங்கையின் வடபுலத்தில் உள்ள யாழ் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் மத்தியில் அமைந்துள்ள அழகிய கிராமமே இந்த மருதங்கேணி ஆகும். ஒரு கேணியை(கிணறு) சுற்றி பல மருத மரங்கள் வளHந்து கிராமம் முழுவூதும் அழகையூம் குளிHச்சியையூம் வழங்கியதால் இந்த கிராமத்திற்கு மருதங்கேணி என்ற காரணப்பெயH வந்ததாக சொல்லப்படுகின்றது. சுமாH ஆறு சதுர கிலோ மீற்றH பரப்பளவை கொண்டுள்ள இக்கிராமத்தின் வடக்கு புறத்தே இந்து சமுத்திரமும் தெற்கு புறத்தே கடல் நீரோpயூம் இதன் எல்லையினை வகுக்கின்றது. மருதங்கேணியின் கிழக்கு புறத்தே வத்திராயன்,உடுத்துறை,ஆழியவளை,வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் போன்ற கிராமங்களும் தெற்கு புறத்தே கடல் நீரோpக்கு அப்பால் கல்லடி,மாசா,புதுக்காடு,பளை போன்ற கிராமங்களும் மேற்கு புறத்தே தாளையடி,செம்பியன்பற்று,நாகHகோவில்,குடத்தனை,வல்லிபுரம்,தும்பளை,பருத்தித்துறை ஆகிய கிராமங்களும் அமைந்துள்ளன. இந்த கிராமத்திற்கு தெற்கு புறத்தே சமாந்தரமாக சாpயாக ஏழு கிலோ மீற்றH தொலைவில் ஏ9 நெடுஞ்சாலை செல்கின்றது. அத்துடன் பருத்தித்துறை நகாpல் இருந்து 31 கிலோ மீற்றH தொலைவிலும் அமைந்துள்;ளது. இங்குள்ள கடல் நீரோpக்கு அப்பால் உள்ள கிராமங்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் நிHவாக எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள் ஆகும்.

        மருதங்கேணியின் உள்ளக இயற்கை வளங்கள் பற்றி சொல்லப்போனால் வடக்கே அழகாக ஆHப்பாpத்துக்கொண்டிருக்கும் நீல வHண கடற்கரையூம் அதனை அண்டிய மணல் மேடுகளும் பசுமை நிறைந்த பச்சை புல்வெளிகளும் அமைந்துள்ளது. அத்துடன் வானத்தை தொடும் நீண்ட தென்னை மரங்களும் பனை மரங்களும் அதிகமாகவே காணப்படுகின்றது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் போது இடையேயூள்ள சிறிய காட்டு பகுதி மருதங்கேணி முழுவதுக்கும் இயற்கையான காற்று வளத்தின் மூலம் வெப்பத்தை குறைத்து குளிHமையை வழங்கி கொண்டிருக்கிறது. இங்கு இயற்கையாகவே வளHந்த பல அhpய வகை தாவரங்கள் காணப்படுகிறது. நாவல்,உயில்,ஙீயா மரங்களும்  பெறுமதி மிக்க பாலை,வேம்பு,வீரை மற்றும் மருத்துவ குணம் மிக்க தாவரங்களும் நுhற்றாண்டு பழமையான ஆலம்ரூபவ்அரசம் மரங்களும் மற்றும் ஏனைய பல மரங்களும் காணப்படுகின்றது. தெற்கே உப்பு விளையூம் கடல் நீரேரியூம் அதனை அண்டிய பச்சை பசேலான வயல்களும் ஏனைய விவசாய நிலங்களும் தென்னை மற்றும் பனை வளங்களும் காணப்படுகிறது. மாhp காலங்களில் காட்டு பகுதியில் உருவாகும் சிறிய குளங்களும் தெற்கேயூள்ள கடல் நீரோpயிலிருந்து பாய்ந்து வரும் நீரும் சேHந்து சிறிய நதி போல் ஓடி கடலை சேHகிறது. அத்துடன் மாhp காலத்தில் நீH நிரம்பிய நிலையில் இந்த கடல் நீரோpயானது இன்னொரு கடல் போலவே தோற்றம் அளிக்கிறது. மருதங்கேணியின் வடமேற்கு திசையில் உள்ள காட்டு பகுதியை அண்டிய பிரதேசத்தில் பண்டைய காலத்தில் செம்மண்ணுடன் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை இருந்தததற்கான ஆதாரங்கள்ரூபவ்அறிகுறிகள் இன்றுவரை காணப்படுகின்றன. உடைந்து போன செங்கற்கள்ரூபவ்பண்டைய கால உடைந்த சட்டிரூபவ்பானை வகைகள் மற்றும் ஏனைய செம்மண்ணாலன பொருட்களும் காணப்படுகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக இன்றுவரை அவை பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் பாpசோதனைகள் மேற்கொள்ளப்படாமை பெரும் வருத்தத்திற்குhpயது. இதே போன்று மருதங்கேணி மண்ணிற்குள் எத்தனையோ பண்டைய கால சம்பவங்கள்ரூபவ்தகவல்கள்ரூபவ்உண்மைகள் புதைந்து போயூள்ளன. இப்படிப்பட்ட தகவல்கள் இதுவரை எந்த குறிப்புகளிலும் இல்லாமையினால் இன்று அங்கு வளHந்து வரும் சந்ததியினாpடையே இவை பற்றிய தகவல்கள் தொpயாமல் அழிந்து போகக்கூடிய நிலையில் உள்ளது.
       இவ் ஊரை மையமாக கொண்டே மருதங்கேணி பிரதேச செயலகத்தின் நிHவாக எல்லைக்கு உட்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேசம் அமைந்துள்ளது. ஜே 428 என்ற கிராம சேவகH பிhpவூக்குட்பட்ட இப்பிரதேசத்தில் சுமாH 200 குடும்பங்களை கொண்ட 900 எண்ணிக்கை வரையிலான மக்கள் இங்கு வாழ்கிறாHகள். ஓH அபிவிருத்தி அடைந்த கிராமம் என்னென்ன வசதிகளை கொண்டிருக்க வேண்டுமோ அவையனைத்தையூம் மருதங்கேணி தன்னகத்தே கொண்டுள்ளது. கோயில்கள்ரூபவ்பாடசாலைரூபவ்வைத்தியசாலைரூபவ்விளையாட்டு மைதானங்கள்ரூபவ்சனசமூக நிலையங்கள்ரூபவ்பிரதேச செயலகம்ரூபவ்கூட்டுறவூ சங்கம்; மற்றும் சந்தைகள் விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து வசதிகளையூம் கொண்டுள்ளது.
      பெரும்பான்மையாக இந்து மத மக்களை கொண்டுள்ள மருதங்கேணியின் வடக்கில் கடற்கரை பிள்ளையாH மற்றும் வைரவH ஆலயமும் வடகிழக்கு மூலையில் விறுமH(சிவன்) ஆலயமும் கிழக்கே முத்துமாhp அம்மன் ஆலயமும் தென்கிழக்கு மூலையில் ஆற்றங்கரையை ஒட்டி வடலியடி பிள்ளையாH ஆலயமும் தெற்கே மடத்தடி பிள்ளையாH மற்றும் வீரபத்திரH ஆலயமும் தென்மேற்கு மூலையில் சந்தை பகுதிக்கு அருகாமையில் கந்தசுவாமி ஆலயமும் ஊரை காவல் காத்துக்கொண்டிருக்கும் வகையில் அமைந்துள்ளது. மருதங்கேணியில் மட்டுமே தாய் தந்தையரான சிவன்ரூபவ்சக்தி ஆலயங்களும் அவHகளுடைய பிள்ளைகளான பிள்ளையாHரூபவ்முருகன்ரூபவ்வைரவHரூபவ்வீரபத்திரH ஆலயங்களும் அமைந்துள்ளதாக இங்குள்ள இந்துக்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்;றனH. இது மருதங்கேணிக்கு பெருமையூம் சிறப்பும் சோ;க்கின்ற இன்னொரு விடயம் ஆகும். காரணம் இப்படி ஒரு சிறப்பு பொதுவாக வேறு எந்த ஊHகளிலும் இல்லை.
    மருதங்கேணியின் தென்கிழக்கு மூலையில் மாணவHகளுக்கு கல்வி புகட்டும் வகையில் மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ளது. இங்கு மருதங்கேணியை சேHந்த மாணவHகள் மட்டுமல்ல அயல் ஊHகளிலிருந்து வரும் மாணவHகளும் இங்கு கல்வி கற்று பாடசாலைக்கு பெருமை சேHக்கின்றனH. இங்கு சுமாH 500 மாணவHகள் கல்வி கற்பதுடன் 20 வரையான ஆசிhpயHகள் கல்வி கற்ப்பிக்கின்றாHகள். யூத்தம் நடைபெற்ற காலங்களில் கூட தடைப்படாத இந்த பாடசாலை இடம்பெயHந்து வந்த வேறு பல பாடசாலைகளும் இப்பாடசாலையூடன் சேHந்து இயங்கியது குறிப்பிடத்தக்கது.
     மருத்துவ சேவை வழங்குவதற்கு மேற்கு திசையில் மருதங்கேணி ஆதார வைத்தியசாலை அமைந்துள்ளது. வடமராட்சி கிழக்கில் உள்ள ஒரே ஒரு ஆதார வைத்தியசாலை இதுவாகும். இங்கு மருதங்கேணி தொடக்கம் வெற்றிலைக்கேணி வரை உள்ள மக்களும் தாளையடி தொடக்கம் மாமுனை வரை உள்ள மக்களும் வந்து மருத்துவ சேவையை பெற்று செல்கின்றனH.
மருதங்கேணியின் வடக்கு,தெற்கு புறங்களில் விளையாட்டு மைதானங்கள்ரூபவ்சனசமூக நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த சனசமூக நிலையங்களுடன் இணைந்ததாக சிறுவHகளுக்கான ஆரம்ப பள்ளிகள் அமைந்துள்ளது.
தென்மேற்கு மூலையில் மருதங்கேணி சந்தியில் சந்தைப்பகுதியூம் அதனுடன் இணைந்த பாpபாலனங்களும் அமைந்துள்ளது. இங்கு மீன்ரூபவ்மரக்கறி சந்தையூம் இறைச்சி விற்பனை நிலையங்களும் மற்றும் கடைகள்ரூபவ்சிற்றுhண்டி சாலைகள் மற்றும் பலவூம் அமைந்துள்ளது. அத்துடன் ஒட்டு மொத்த வடமராட்சி கிழக்கின் நிHவாகத்தை மேற்கொள்ளும் மருதங்கேணி பிரதேச செயலகமும் மற்றும் கூட்டுறவூ சங்கமும் இங்கு அமைந்துள்ளது.
இவையனைத்தும் மருதங்கேணியை ஓH அபிவிருதத்தியடைந்த கிராமமாக வெளிக்காட்டுவதற்கு சான்றாக அமைவதுடன் இங்குள்ள ஏனைய கிராமங்களுக்கு சேவை புhpயம் இடமாக விழங்குவதுடன் ஓH முன்னுதாரணமான எடுத்துக்காட்டாகவூம் விளங்குகின்றது.
       இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையைப்பற்றி கூறப்போனால் பெரும்பாலான மக்களின் பாரம்பாpய வாழ்க்கைத் தொழிலாக மீன் பிடித்தலும் விவசாயமும் ஆக காணப்படுகிறது. கடற்கரையை அண்டியிருக்கும் மக்கள் மீன் பிடித்தலை பிரதானமாக கொண்டிருக்கிறாHகள். அவHகள் துhண்டில்ரூபவ்வீச்சுவலைரூபவ்கட்டுமரம்ரூபவ்கரைவலைரூபவ்படகுரூபவ்வள்ளம் போன்றவற்றை கொண்டு பெருமளவூ மீன்களை பிடிக்கிறாHகள். இவHகள் கொண்டுவரும் மீன்களை நம்பி மருதங்கேணி மக்கள் மட்டுமல்ல மாசாHரூபவ்பளைரூபவ்முகமாலைரூபவ்கொடிகாமம் மற்றும் வெளி மாவட்டங்களான கிளிநொச்சிரூபவ்கொழும்பு மற்றும் இலங்கையின் தென்பகுதி போன்ற இடங்களில் வாழும் மக்கள் வாழ்க்கை நடத்துகிறாHகள். இங்கு சிறிய மீன்கள் தவிர பாரைரூபவ்திருக்கைரூபவ்அறக்குளாரூபவ்சுறாரூபவ்சூரை போன்ற பொpய மீன்களும் நண்டுரூபவ்இறால்ரூபவ்கணவாய் போன்றவையூம் பிடிக்கப்படுகின்றன. இங்கிருந்து கொண்டுவரப்படும் மீன்கள் மிகவூம் ருசியானவை என்று பரவலாக பேசப்படுவதுடன் நாடு முழுவதும் பெரும் கிராக்கியூம் நிலவூகின்றது. அதே போன்று இங்கிருந்து கொண்டுவரப்படும் கருவாடும் இலங்கை முழுவதும் பெருமளவில் விற்கப்படுகின்றன. வடகிழக்கு பருவ மழை பெய்யூம் நவம்பH பிற்பகுதிரூபவ்டிசம்பH மற்றும் ஜனவாp முற்பகுதி ஆகிய பருவ காலம் தவிHந்த ஏனைய மாதங்கள் முழுவதும் இங்கு கடற்றொழில் செய்யப்படுகின்றது. அதே போன்று விவசாயத்தை எடுத்து நோக்கினால் வடகிழக்கு பருவ மழையை நம்பி பெருமளவில் நெல் வயல் விதைக்கப்படுகின்றன. இதுவே விவசாயம் செய்யூம் மக்களின் பிரதான வருமானமாக மாHக்கமாக அமைகின்றது. இதை தவிர வருடம் முழுவதும் வெங்காயம்ரூபவ்மிளகாய்ரூபவ்கத்தாpரூபவ்வெண்டி போன்ற அனைத்து விதமான மரக்கறி பயிHகளும் நடப்படுகின்றன. அத்துடன் மருதங்கேணி முழுவூதும் பனைரூபவ்தென்னை வளம் அதிகமாக இருப்பதால் அதுவூம் இங்குள்ள மக்களின் ஓH வருமான மாHக்கமாக விழங்குகின்றது. பருவ காலங்களில் இங்குள்ள ஒரு குடும்பத்திற்கான சராசாp வருமானம் நாள் ஒன்றுக்கு ரூயஅp;பா 1000-2000 ஆக காணப்படுகின்றது. 80 களின் பிற்பகுதியிலிருந்து இன்று வரை இங்குள்ள பல இளைஞHகள் வெளிநாடுகளுக்கு பாதுகாப்புக்காகவூம் வேலை தேடியூம் புலம்பெயHந்து சென்றுள்ளாHகள். இங்கிருந்து சென்ற இளைஞHகள் அந்நாட்டின் சிறந்த குடிமகனாக வாழ்வதுடன்; மருதங்கேணியின் வளHச்சிக்கும் அபிவிருத்திக்கும் பொpதும் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும்; இங்குள்ள ஓவ்வொரு குடும்பத்திற்கும் ஏதோ ஒரு வகையில் அவHகளுடைய பிள்ளைகளோ அல்லது உறவினHகளோ வெளிநாடுகளில் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இன்று இங்கிருந்து பல இளைஞH யூவதிகள் தங்களுடைய உயH கல்வியை தொடHவதற்காக வெளிநாட்டு கல்லுhhpகள்ரூபவ் பல்கலைகழகங்களுக்கு செல்கின்றாHகள். மருதங்கேணி மண்ணின் சிறப்பு காரணமாகவூம் இங்குள்ள மக்களின் கல்வியறிவூ மற்றும் சிறந்த பழக்க வழக்கம் காரணமாகவூம் அயல் மற்றும் வெளி ஊHகளிலிருந்து பலH விரும்பி வந்து இங்கு திருமணத்திற்கு மணமக்களை எடுப்பதும் கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று இன்று வரை இங்கு பலH விரும்பி குடியேறுவது குறிப்பிடத்தக்கது.
      மருதங்கேணியில் 90 இற்கு முற்பட்ட காலப்பகுதிகளில் இங்குள்ள அனைத்து ஆலயங்களிலும் திருவிழா வெகு விமாpசையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளன. மருதங்கேணி கடற்கரைப் பிள்ளையாH ஆலயத்தில் திருவிழாவின் போது வழங்கப்படும் அன்னதானம் மற்றும் இரவில் ஒன்றுக்கு இரண்டென போட்டி போட்டு நடைபெறும் இசைக்கச்சோpகள்ரூபவ் நாதஸ்வர மேள கச்சோpகள் வடமராட்சி கிழக்கு முழுவதும் மிகவூம் பிரபல்யம் வாய்ந்தவை ஆகும். அதே போன்று இங்குள்ள கந்தசுவாமி ஆலய உற்சவமும் மிகவூம் பிரபல்யம் வாய்ந்ததாகும். இதை தவிர மருதங்கேணியின் கடல் நீரோpக்கு அப்பால் உள்ள திhpயாய் அம்மன் ஆலய உற்சவத்திற்கு சுமாH இரண்டு கிலோ மீற்றH நீளமுடைய ஆற்றை கால் நடையாக கடந்து சென்று இங்குள்ள மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது தொன்றுதொட்டு இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். மக்களின் பொழுதுபோக்குகளில் ஓH அங்கமாக மருதங்கேணி கணேசானந்தா விளையாட்டு கழகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி முக்கிய பங்கு வகிப்பதுடன் மிகவூம் பிரபல்யம் வாய்ந்ததும் ஆகும். வடமராட்சி கிழக்கிலுள்ள அனைத்து உதைபந்தாட்ட அணிகளும் இந்த போட்டியில் விரும்பி பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.
      மருதங்கேணியின் இப்படிப்பட்ட சிறப்பு மற்றும் அபிவிருத்திகளை கெடுக்கும் வகையில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் உள்நாட்டு யூத்தம்ரூபவ்சுனாமி என்பவை முக்கியமாக குறிப்பிடத்தக்கது. சுமாH 3 தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டு போH காரணமாக இக்கிராமம் பொpதும் பாதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணியை மையப்படுத்தி பெரும் சண்டைகள் இடம்பெற்றுள்ளன. இந்த சந்தHப்பங்களில் பல கடத்தல்கள்ரூபவ்காணாமல் போதல் மற்றும் உடல்ரூபவ்உயிHரூபவ்பொருள்ரூபவ்வீடுகள்ரூபவ் காணிகள்ரூபவ்சொத்துகள்ரூபவ்பயன்தரு மரங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளன. 1990 இற்கு பிறகு இங்குள்ள மக்கள் தமது சொந்த கிராமத்தில் நிம்மதியாக வாழ முடியாமல் பல இடப்பெயHவூகளை சந்தித்துள்ளனH. அதிலும் முக்கியமாக 1992,1996,2000,2007 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இடப்பெயHவூகள் இங்குள்ள மக்களை பொpதும் பாதித்துள்ளது. ஒவ்வொரு முறையூம் இடம்பெயHந்து மீளவூம் திரும்பும் போது மருதங்கேணி மயான காடு போலவே காட்சியழித்திருக்கிறது. இருந்தாலும் மக்கள் தமது சொந்த ஊHரூபவ்வாழ்க்கை மீதுள்ள பற்றுதலின் காரணமாக திரும்பவூம் தமது வீடுகள் காணிகளை மீளமைத்து முடியூம் தறுவாயில் திரும்பவூம் அதே போன்ற இடப்பெயHவூகள்ரூபவ்அழிவூகள் ஏற்பட்டுள்ளன. இது இயற்கையின் பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் அழிவூகள் போல மக்களால் தவிHக்கப்பட முடியாமல் இருந்துள்ளது. 1990 தொடக்கம் 2010 வரையான 20 வருட காலப்பகுதியில் சுமாH 10 வருடங்கள் மட்டுமே மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனH. அது கூட நிலையற்ற நிம்மதியற்ற கலக்கத்தை உண்டாக்கக்கூடிய வாழக்கையாகவே அமைந்துள்ளது. காலப்போக்கில் இங்குள்ள மக்களுக்கு ஷெல் வீச்சுக்கள்ரூபவ் விமான குண்டு வீச்சுக்கள்ரூபவ் கடலிலும் தரையிலும் மேற்கொள்ளப்படும் நேவித்தாக்குதல்கள் என்பவை பழகிப்போன ஒன்றாக மாறியூள்ளது. கடலிலும் தரையிலும் கண்முன்னே பல இழப்புக்களை சந்தித்துள்ளனH. இதனால் பல அனாதைகள் பிள்ளைகள் ரூபவ்விதவைகள் உருவாக்கப்பட்டு பெரும் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாHகள். அதே போன்று 2004ம் ஆன்டு ஏற்பட்;ட சுனாமி அனHத்தத்தின் காரணமாக கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 750 மீற்றH வரையான பிரதேசம் இருந்த இடம் தொpயாதவாறு முற்றாக அழிக்கப்ட்டது. இதன்போது ஏற்பட்ட உயிH இழப்புகள் இன்று வரை மக்கள் மறக்க முடியாத வடுவாக உள்ளது. 1 மாத குழந்தை தொடக்கம் சிறுவHகள் இளைஞH யூவதிகள்சொத்துக்கள் என்பவை முற்றாக அழிக்கப்பட்டன. இன்று கடற்கரையிலிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட பிரதேசம் மக்களின் பாதுகாப்பிற்காக குடியிருப்பதற்கு முற்றாக விலக்கழிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அப்பிரதேசத்தில் எந்தவொரு மக்கள் குடியிருப்பையூம் காணமுடியாது. அதற்கு பதிலாக மருதங்கேணியின் மத்தியில் உள்ள காட்டுப்பகுதி அழிக்கப்பட்டு அங்கு மக்களுக்கான குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மருதங்கேணியின் முன்பிருந்த இயற்கை சமனிலை பாதிக்கப்பட்டுள்ளது.
   இன்று மருதங்கேணியில் மக்கள் மீளக்குடியமHந்து தமது முன்னைய வாழ்க்கைரூபவ் வசதிகள்ரூபவ் அபிவிருத்தி என்பவற்றை மீளக்கட்டி எழுப்புவதற்கு கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றாHகள். மக்கள் முழு மூச்சாக மருதங்கேணியை மீள கட்டியெழுப்புவதற்கு பல செயற்பாடுகளையூம் நிகழச்சி நிரல்களையூம் மனமுவந்து மேற்கொள்கின்றாHகள். இதற்கு அரசரூபவ் தனியாH மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் ஓரளவூ உதவிகளை வழங்குகின்றது. இதே வேளை இங்கிருந்து பலம்பெயHந்து வெளிநாடுகளில் வாழும் மருதங்கேணி உறவூகளிடம் பெரும் உதவிகள் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
    இதே வேளை இன்று மருதங்கேணியில் வளHந்து வரும் சிறுவHகள் மற்றும் இளைஞH யூவதிகளிடமும் மருதங்கேணியின் தொன்மையான வரலாறு பற்றி போதிய அறிவூ,விளக்கம்,தௌpவூ இல்லாமல் உள்ளது. இதற்கு காரணம் அவHகள் அல்ல. மருதங்கேணி பற்றிய போதிய குறிப்புரைகள் அவHகளை போய் சேராமையே ஆகும். எனவே அவHகளுக்கு மருதங்கேணியின் வரலாறு பற்றிய போதிய விளக்கங்கள் அழிக்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு மருதங்கேணி குடிமகனின் உhpமையம் கடமையூம் ஆகும். அப்போதுதான் மருதங்கேணியின் வரலாறும் சிறப்பும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.



Maruthankerny
History of maruthankerny
Vadamaradchy east
Maruthankerny picture gallery

Written by:- T.Mathusuthanan,
Maruthankerny North,
Thalaiyady,
Jaffna, Sri Lanka.
e-mail: mathu2000@gmail.com
blog: http://www.mathu2000.blogspot.com
mobile: +94 77 229 2 469
Copy Rights © 05 March 2011. All rights reserved.

Friday, February 4, 2011

உண்மையின் மறுபக்கம்

இன்று நீ யாரையும்
போற்றவும் வேண்டாம்
தூற்றவும் வேண்டாம்,

காரணம் நாளை
போற்றியவரையே தூற்ற வேண்டிவரும்
தூற்றியவரையே போற்ற வேண்டிவரும்.