Monday, March 23, 2015

Real Situation. What Next.....???

1948- இலங்கைக்கு சுதந்திரம்
1978- இலங்கை சனநாயக சோசலிச குடியரசு
1983- ஈழப்போர்
2000- மில்லேனியம் நுாற்றாண்டும் உலகமயமாதலும்
2005- மகிந்த சிந்தனை
2009- உள்நாட்டு யுத்தம் நிறைவு
2010- வடக்கின் வசந்தம்
2014- தொடர்கின்றது........

ஆனாலும்...........,
வடமராட்சிக் கிழக்கு.....
வடமராட்சிக் கிழக்கா...............??????
அது எங்கு இருக்கின்றது?
....... அது வன்னியா....? இல்ல கிளிநொச்சி மாவட்டமா...?

இது தான் எமது பிரதேசத்தின் இன்றை நிலை!

இராஜ ராஜ சோழன்(கி.பி 1012) காலத்திலேயே பெயர் பெற்றிருந்த எமது பிரதேசத்தின் இன்றைய நிலை இதுதான்.

கடந்த 27 வருட கால உள்நாட்டு யுத்தத்தை முற்றுமுழுதாக அனுபவித்து பிரேதமாய் காணப்படும் பிரதேசமே எமது வடமராட்சிக் கிழக்கு.

உள்நாட்டு யுத்தமும் முடிந்து விட்டது, சில அபிவிருத்திகளும் ஆங்காங்கே தென்படுகின்றன.
ஆனாலும் எமக்கு விமோசனம் .இல்லை.

*சீரான போக்குவரத்து பாதைகள் இல்லை.
*தொடர்ச்சியான போக்குவரத்து மார்க்கங்கள் இல்லை.
*பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை.
*பல விடயங்களில் ஓரங்கட்டப்படுகின்றமை.
*பிரதேசத்தை கணக்கெடுக்காமை.
*சீரான தொடர்பாடல் வசதியின்மை.
*இளைஞர் யுவதிகளின் வேலையின்மை.
*எந்தவொரு கைத்தொழில் பேட்டைகளும் இன்மை.
*மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படாமை.
*மக்கள் வெளியேற்றம்.
*புத்தி ஜீவிகளின் பிரதேசம் மீதான அக்கறையின்மை.
*புலம்பெயர்தோர் விழிப்பூட்டப்படாமை.
*பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் அக்கறையின்மை.
etc...
etc...
etc...
இவ்வாறாக எமது பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு பிரச்சனைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்து என்ன பயன்?

நாம் ஏதாவது செய்யவேண்டும்............................!
எமது பிரதேசம் முன்னேற வேண்டும்.
எமது மக்களின் வாழ்க்கைத்ததரம் உயர்த்தப்படவேண்டும்.
யாழ் மாவட்டத்தில் எமது பிரதேசமும் முக்கிய கேந்திரமாக(Hub) மாறவேண்டும்.
எமது பிரச்சனைகள் வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும்.
எமது செய்திகள் அச்சு,இலத்திரனியல் ஊடகங்களில் இடம்பெற வேண்டும்.
எமது பிரதேசத்திலும் யாவரும் அக்கறை கொள்ள வேண்டும்.


நன்றி
(17-11-2014)

உண்மை தான்.... உள்நாட்டு யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது(வன்னியை விட) எமது பிரதேசம் தான். இருந்தும் யாழ்மாவட்ட பிரதேசம் என்ற மாயைக்குள் எல்லாமே மறைக்கப்படுகின்றன,மறுக்கப்படுகின்றன.

Population Growth Rate in Maruthankerny Division and Jaffna District(1981-2014)




இங்கு குறிப்பிடத்தக்கவை.......
1) வட மாகாணத்திலே் உள்ள இடங்களில் மட்டும் சனத்தொகை வளர்ச்சி வீதம் மறைப் பெறுமானத்தில் காணப்படுகிறது.
2) மருதங்கேணிப் பிரதேசத்தில் 2014ம் ஆண்டில் வரவேண்டிய உண்மை சனத்தொகை 20138 ஆகும்.
3) ஆனால் தற்பொழுது அண்ணளவாக 12500 வரையான மக்களே காணப்படுகின்றனர்.
4) இது 1981 ஆம் ஆண்டில் காணப்பட்ட மக்கள் தொகையை(13673) விட குறைவாகும்.

Population Density of Divisional Secretariate in Jaffna District

இங்கு குறிப்பிடத்தக்க விடயங்கள்......
1) பிரதேச செயலகங்களின் எல்லைகளுக்குட்பட்ட  பரப்பின் அடிப்படையில் நோக்கினால் வடமராட்சிக் கிழக்கு(மருதங்கேணி) ஆனது இரண்டாம் இடத்தில் (179) காணப்படுகிறது.
2) ஆனால் சனத்தொகை அடர்த்தியை நோக்கினால் மிகவும் கடைசியான நிலையிலேயே(15) காணப்படுகிறது.
3) அதாவது ஒரு சதுர கிலோமீற்றர் பரப்புக்கு 15 மக்களே காணப்படுகின்றனர்.

இவற்றுக்கு காரணம் என்ன...........
1) 30 வருட கால யுத்தம்
2) இடப்பெயர்வு
3) புலம்பெயர்வு
4) யுத்த உயிரிழப்பு
5) சுனாமி உயிரிழப்பு
6) மக்கள் வெளியேற்றம்
7) போதிய வசதிகளின்மை 

இதன் முடிவு............................???