Monday, March 29, 2010

ஊருக்குத் தான் அறிவுரை, உனக்கல்லடி.

அறிவுரையின் மறுபக்கம்

நாம் பல சமய கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிற்கு சென்றிருக்கின்றோம். அங்கே ஒவ்வொரு பேச்சாளனினதும் உரையை கேட்கின்றோம். ஆனால் அவர்கள் கூறும் அறிவுரையின் எவ்வளவு பகுதியை ஏற்றுக்கொள்கின்றோம் என்பதுதான் இங்கு முக்கியம் வகிக்கின்றது.
ஒவ்வொரு பேச்சாளனும் பேசும் போது "காந்தி அப்படி வாழ்ந்தார்,இயேசு இப்படி வாழ்ந்தார்,புத்தபிரான் எவ்வாறு தர்மத்தை போதித்தார்" என்று சில எடுத்துக்காட்டுகளை கூறுவார்கள். ஆனால் அந்த எடுத்துக்காட்டுகளிற்கும் அந்த பேச்சை பேசும் நபருக்கு எவ்வளவு குறைந்தளவேனும் தொடர்பு இருக்கின்றது என்பதைத்தான் நாம் அறிய முற்படுவோம்.

எனவே உண்மையான ஓர் பேச்சாளன் பேசும் போது "நீ எப்படி வாழ்ந்தாய், நீ எப்படி கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தாய்,நீ ஆராய்ச்சிகள்,கண்டுபடிப்புகள் மேற்கொண்டாய்" என்பதைத்தான் எடுத்துக்காட்டாக கூறவேண்டும். நாம் ஒவ்வொருவரும் பேசும்போது "நான் எவ்வளவு தகுதியுள்ளவனாக இருக்கின்றேன்" என்பதை கருத்தில் கொண்டே பேசவேண்டும். எமது தகுதிக்கு மீறி நாம் கருத்துக்களை முன்வைக்க முயலக்கூடாது.அப்பொழுது தான் எம்முடைய உரைக்கு ஓர் பூரணத்தன்மை உருவாகும்.

உதாரணமாக பாடசாலையில் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் சாதி,மதம் பார்க்கக்கூடாது,ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று அறிவுரை கூறுவார். ஆனால் அக்கூற்றுகளுக்கும் ஆசிரியருக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கின்றது என்பதைத்தான் மாணவர்கள் யோசிக்கத் தூண்டுவார்கள் (நல்ல ஆசிரியர்கள் மன்னித்துகொள்வார்கள்). ஆசிரியர் கூறும் கருத்துக்களுக்கும் அவருடைய நடத்தைகளும் பிழையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் ஆசிரியரின் கூற்றுக்களுக்கு எதிராகவே மாணவர்கள் செயற்பட முற்படுவார்கள்.

இதிலிருந்தே நாம் உணர்ந்து கொள்ள வேண்யது :-"தத்துவம்,அறிவுரை கூறுவதற்கு எடுத்துக்காட்டாக மற்றவர்களை எடுத்துக்கொள்ளாமல்,உன்னையே நீ எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்".அப்பொழுதுதான் அச்சொற்பொழிவிற்கு ஓர் பூரணத்தன்மை கிடைக்கும். இல்லாவிட்டால் எல்லோரும் கூறுவது போல் செல்லாக் காசாகி விடும். இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது சரி இக்கருத்தை கூறுவதற்கு எனக்கு எவ்வளவு தகுதி இருக்கின்றது என்பது எனக்கே தெரியவில்லை.

No comments:

Post a Comment